Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரான்ஸ்-அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்

In ஐரோப்பா
Updated: 08:12 GMT, Aug 13, 2017 | Published: 08:10 GMT, Aug 13, 2017 |
0 Comments
1120
This post was written by : Elakkiya
macron-trump-m

கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை சமாளிப்பது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த உரையாடலின் போது ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியாவின் ஸ்திரமற்ற தன்மை மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள் காரணமாக அதிகரித்துவரும் பதற்றங்களை எதிர்கொள்வது தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வடகொரியா தனது சர்வதேச கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி மக்ரோங் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம்பாயும் ஏவுகணை மற்றும் அணுவாயுத அச்சுறுத்தல்களால் மக்ரோங் கவலை அடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் உலக தலைவர்களின் பேச்சுவாரத்தை அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)