Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கர நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

In இந்தியா
Published: 08:24 GMT, Aug 13, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Puvanes
Landslide001

இமாச்சல பிரதேசத்தில் மாண்டி எனப்படும் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதோடு, பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நிலச்சரிவில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை ஐம்பதையும் தாண்டலாம் என அஞ்சப்படுவதாக இமாச்சல போக்குவரத்து அமைச்சர் ஜி.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

குறித்த நிலச்சரிவில் 2 பயணிகள் பேருந்துகள் 800 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுவதோடு மேலும் சில வாகனங்களும் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அனர்த்த பிரதேசத்திற்கு விரைந்துள்ள தேசிய இடர்தீர்ப்புப் படையினரும், இராணுவத்தினரும் இணைந்து மீட்புப் பணிகளை தொடர்ந்துள்ளதாகவும், இதுவரை 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg