Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புர்க்கினா பாசோவில் பயங்கரவாதத் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு

In
Published: 04:26 GMT, Aug 14, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Risha

மேற்கு ஆபிரிக்க நாடான புர்க்கினா பாசோவின் தலைநகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பதினேழு பேர் உயிரிழந்ததுடன், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உணவு விடுதியொன்றின் வெளியே அமர்ந்திருந்த வாடிக்கையாளர்களை நோக்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்று துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலிலேயே குறித்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.

தாக்குதல் சம்பவத்தையடுத்து, தலைநகர் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்க பிரஜைகளை புர்க்கினா பாசோவிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த தாக்குதல், சஹெல் பிராந்தியத்தில் தீவிரமாக செயற்படும் அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் செயலாகும் என அஞ்சப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg