Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிசுவை புதைத்த தாய்: தோண்டி எடுத்த பொலிஸார்

In இலங்கை
Updated: 10:38 GMT, Aug 14, 2017 | Published: 10:11 GMT, Aug 14, 2017 |
0 Comments
1599
icon_com
This post was written by : Surenth
Child Death (3)

லிந்துலை மட்டுக்கலை பகுதியில் தாயொருவரால் புதைக்கப்பட்ட சிசு ஒன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (திங்கட்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் தயா நாணயக்கார முன்னிலையில் லிந்துலை பொலிஸார் பொது மக்களின் உதவியுடன் இந்த சிசுவை தோண்டி எடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலணி பகுதியில் 23 வயது பெண்ணொருவருக்கு அதிக குருதிப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பெண் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அந்தப் பெண், குழந்தை ஒன்றை பெற்றமையால் அதிக குருதி போக்கு ஏற்பட்டுள்ளமை வைத்திய அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிசு தொடர்பாக வைத்திய அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்ட போது, சிசு உயிரிழந்து தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து வைத்திய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், சிசுவை பெற்றெடுத்த தாய் மற்றும் சிசுவை தோட்டத்தில் புதைக்க உதவி புரிந்த பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதைக்கப்பட்ட சிசுவை தோண்டுவதற்கு லிந்துலை மற்றும் நுவரெலியா பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை நேற்று பெற்றுக்கொண்டனர். இதன்படி, நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் தயா நாணயக்கார தலைமையில் புதைக்கப்பட்ட சிசு இன்று தோண்டப்பட்டது.

தோண்டி எடுக்கப்பட்ட சிசுவின் உடலம் நீதிமன்ற அனுமதியுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவரும் பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Child Death (1) Child Death (2) Child Death (4) Child Death (5)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg