Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீடித்த நட்பு உள்ளது: சர்ப்ராஸ் அஹமட்

In இலங்கை
Updated: 09:58 GMT, Aug 16, 2017 | Published: 09:52 GMT, Aug 16, 2017 |
0 Comments
1176
This post was written by : Vithushagan
d54943fcca48d3a3fc28aaf4be11fe7b_XL

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நல்லுறவு 2 ஆயிரத்து 300 ஆண்டுகளிற்கு முன்பிருந்தே இடம்பெற்று வருவதாக,  பாகிஸ்தானின் இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சர்ப்ராஸ் அஹமட்  கான் ஷிப்றா தெரிவித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், முன்னாள் பிரதமர் அமரர் டி.எஸ்.சேனநாயக்க பாகிஸ்தானிற்கு விஜயம் செய்து, பாகிஸ்தானின் ஸ்தாபகரான குவைட் ஐ அசாம் முஹம்மட் அலி ஜின்னாவை சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கு இடையிலான ”நீடித்த நட்பு” என்ற நூல் வெளியீட்டு விழாவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இந்த நிகழ்வில், சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இதன்போது அவரிடம் பாகிஸ்தானின் பதில் தூதுவர் இந்த நூலை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg