Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை

In உலகம்
Published: 06:09 GMT, Aug 17, 2017 |
0 Comments
1179
This post was written by : Suganthini
police

வடமேற்குப் பாகிஸ்தானில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

பெஷ்வார் நகரிலிருந்து 250 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள பான்னு நகரில் நேற்று (புதன்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மேற்படி பொலிஸ் உத்தியோகத்தரை இலக்கு வைத்து, இந்தச் துப்பாக்கிச் சூடு பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் பயங்கரவாதிகள், இந்தச் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

அண்மைய வருடங்களாக பான்னு உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தனர். இருந்த போதிலும், அப்பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg