Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலதா மாளிகைக்கு மியன்மார் யானை

In இலங்கை
Published: 04:11 GMT, Aug 19, 2017 |
0 Comments
1239
icon_com
This post was written by : Arul Jesu
DSC_6863

மியன்மார் நிறுவனம் ஒன்றினால் இலங்கைக்கு வழக்கப்பட்ட 24 வயதான யானை ஒன்று நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) திருகோணமலைத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பான் சீவ் மொங் என அழைக்கப்படும் இந்த யானை குட்டி எட்டு அடி உயரமுடையது என்பதுடன், இந்த யானை மியன்மாரிலிருந்து ஒரு கோடியே முப்பத்து ஐந்து இலட்சம் ரூபா செலவில் தனிப்பட்ட கப்பல் ஒன்றின் மூலம் கொண்டு வரப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்தில் இறக்கப்பட்ட குறித்த யானையை கண்டி தலதா மாளிகையின் திவடன நிலமே அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த யானையுடன் இரு பாகன்கள் மற்றும் ஒரு மிருக வைத்தியரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், குறித்த யானை நாட்டில் மூன்று மாதகாலம் தங்கவைக்கப்பட்டு, கலை, கலாச்சார நிகழ்வுகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

DSC_6861

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg