Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விக்டோரியா அசரென்கா அமெரிக்க ஓபன் டென்னிஸில் பங்கேற்கமாட்டார்?

In டெனிஸ்
Updated: 07:29 GMT, Aug 19, 2017 | Published: 07:29 GMT, Aug 19, 2017 |
0 Comments
1192
This post was written by : Risha

உலகின் முன்னாள் முதல்தர வீராங்கனையான விக்டோரியா அசரென்கா எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகும் கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரைவிட்டு சட்டபூர்வமாக பிரிய எதிர்பார்த்துள்ள அசரென்கா, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் குழந்தையை நியூயோர்க்கிற்கு அழைத்துவர முடியாமையால் இப்போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

பெலாரஸ் வீராங்கனையான விக்டோரியா அசரென்கா, தனது பிரசவத்திற்கு பின்னர் மீண்டும் கடந்த ஜூன் மாதம் டென்னிஸ் அரங்கில் கால் பதித்தார். ஆனால், குடும்ப பிரச்சினை காரணமாக போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

விக்டோரியா அசரென்கா, இரண்டு முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg