Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிபோட்டிகள் விபரம் இதோ!

In டெனிஸ்
Updated: 06:40 GMT, Aug 20, 2017 | Published: 06:40 GMT, Aug 20, 2017 |
0 Comments
1218
This post was written by : Anojkiyan

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள இறுதிபோட்டிகள் இன்று அரங்கேரவுள்ளன.

அதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஏழாம்நிலை வீராரான கிரிகோர் டிமிட்ரோவ், அவுஸ்ரேலியாவின் நிக் கிரைகோஸை எதிர்கொள்ளவுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இரண்டாம்நிலை வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹெலப்பும், நான்காம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கர்பின் முகுருஷாவும் பலப்பரிட்சை நடத்தவுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஐந்தாம் நிலையில் இருக்கும் பிரான்சின் நிகோலஸ் மகுட் – ஹெர்பர்ட் ஜோடி, மூன்றாம் நிலையில் இருக்கும் பிரித்தானியாவின் ஜமி முர்ரே – பிரேசிலின் புருனோ சோர்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சீனாவின் சூ-வேய் – ரோமானியாவின் மோனிகா நிகுல்ஸ்கு ஜோடி, இரண்டாம் நிலையில் இருக்கும் சுவிஸர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் – தாய்வானின் சான் யங்-ஜன் ஜோடியை எதிர்கொள்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg