Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணவர்கள் எதிர்ப்பு! பொலிஸார் குவிப்பு

In இந்தியா
Updated: 06:27 GMT, Aug 20, 2017 | Published: 06:27 GMT, Aug 20, 2017 |
0 Comments
1309
This post was written by : Puvanes

பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிப்பைத் தொடர்ந்து அதற்கு எதிராக மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக குறித்த போராட்டம் கோவை மைதானத்தில் இன்று நடைபெறும் என்ற செய்தி பரப்பப்பட்டதனைத் தொடர்ந்து பாதுகாப்பிற்காக கோவை வ.உ.சி மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ் 1 குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முடிவுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் போராட்டங்களும் நடத்தப்படும் என்ற செய்தி பரவியதனைத் தொடர்ந்து மாணவர்களை ஒன்று கூட விடாமல் தடுக்க பொலிஸார் ஆயத்தமாகி வருகின்றனர்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய காரணத்தினால் மாணவர்களை போராட்டம் என ஒன்று திரள விடாது தடுக்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் தீரவிரமாக ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg