Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் குறித்த பார்த்திபன் கருத்து: சமூக வலைத்தளங்களில் மோதல்

In சினிமா
Updated: 13:17 GMT, Aug 21, 2017 | Published: 12:54 GMT, Aug 21, 2017 |
0 Comments
1853
icon_com
This post was written by : Surenth
Parththeeban

வேகத்தை விட விவேகம் பெருசு – ஆனா விவேகத்தை விட அஜீத்தே பெருசு – நான் கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால் சினிமாவுக்கு மட்டுமே ரசிகன் என்று நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்சின் 100ஆவது படமாக உருவாகி வரும் ‘மெர்சல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பார்த்திபன் “பொடிமாஸ் செய்யணும்னா முட்டை வேணும், மாஸ் திரைப்படத்திற்கு விஜய் தான் வேண்டும். விஜய்யின் பெற்றோர் தேவாலயங்களில் நடக்கும் மாஸுக்கு அடிக்கடி போய், இப்படி ஒரு மாஸான பிள்ளைய பெற்றெடுத்திருக்கிறார்கள் என்று பார்த்திபன்” அவரது ஸ்டைலில் பேசினார்.

பார்த்திபனின் இந்த கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது. கைதட்டல்களுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? கொடுத்த காசுக்கு மேல கூவீட்டிங்க என்று பார்த்திபனை அஜித் ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், பார்திபன் அவரது டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் பதில் கருத்து ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “காசுக்கு மாரடிக்காத Massஆன பேச்சுக்கு மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது இதுவே முதன்முறை! வாயார, மனதார வாழ்த்துவது என் மேடை நாகரீகம். அவர் அழைத்தாலும் தலை நிமிர இப்படி சொல்வேன். “வேகத்தை விட விவேகம் பெருசு – ஆனா விவேகத்தை விட அஜீத்தே பெருசு!” – நான் கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால் சினிமாவுக்கு மட்டுமே ரசிகன். ‘ஆளப்போறான்(?) சிறந்த(?) மனிதன்(?) வாழப்போறான் விவசாயி’ – அதுவே நம்பிக்கை நிறைந்த என் பேச்சின் மெர்ஸலான மெசேஜ்!” என பதிவிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg