Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தாய்லாந்து விவசாயிகளை நட்டத்தில் தள்ளிய வெள்ளம்

In உலகம்
Published: 12:52 GMT, Aug 21, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Varshini

வடகிழக்கு தாய்லாந்தின் சகொன் நகொன் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக, அம் மாகாண விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தால், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிய நிலையில், அரிசி உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக தாழ்நில பகுதியில் அமைந்துள்ள தனது நான்கு ஏக்கர் நெல் வயல் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக ஸ்ரீகன் என்ற விவசாயி தெரிவித்துள்ளார்.

குறித்த நெல் வயலில் வரும் வருமானத்தையே ஸ்ரீகனின் குடும்பம் நம்பியுள்ள நிலையில், தமது குடும்பத்தார் வாழ்க்கையை கொண்டுநடத்த வழியின்றி அல்லலுறுவதாக தெரிவித்தார். மேலும், தனது கணவனும் மூத்த சகோதரியும் வேலை தேடிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெள்ளத்தால் இதுவரை 3,613 அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது நிலத்தை ஒவ்வொரு நாளும் சென்று பார்வையிட்டு வருகின்ற போதிலும், இன்னும் வெள்ளம் வடியவில்லையென ஸ்ரீகன் குறிப்பிடுகின்றார்.

அத்தோடு, தான் வளர்த்த 3000 தவளைகள் மற்றும் 20,000 மீன்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கம் நிவாரண உதவிகளை முன்னெடுத்து வருகின்றது.

தாய்லாந்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். சகொன் நகொன் மாகாணமே அதிக பாதிப்பை எதிர்கொண்டது. இந்த மாகாணத்தில் மாத்திரம் 11 பேர் உயிரிழந்ததோடு, 450,000 பேர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg