Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெனிஸ்வரனுக்குப் பதில் விந்தன்: ரெலோ தீர்மானம்!

In இலங்கை
Updated: 16:33 GMT, Aug 21, 2017 | Published: 13:53 GMT, Aug 21, 2017 |
0 Comments
1223
icon_com
This post was written by : Ravivarman
denis

வட.மாகாண சபையின் புதிய போக்குவரத்து அமைச்சராக விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) இன்று (திங்கட்கிழமை) பரிந்துரை செய்துள்ளது.

வவுனியாவில் நேற்றையதினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்டக் குழுக்கூட்டத்தில் டெனிஸ்வரன் கட்சியிலிருந்து விலக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே இன்று தமிழீழ விடுதலை இயக்கம் டெனிஸ்வரனுக்குப் பதிலாக விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

எனினும் தான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் ஒரு சில விடையங்களை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய அடிப்படையில் சில சட்ட நகர்வுகளை மேற்கொள்வேன் என டெனிஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg