Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 16:21 GMT, Aug 21, 2017 |
0 Comments
1268
icon_com
This post was written by : Sivaguru Siva
_97460021_y_comp_white

பார்சலோனா தாக்குதலின் முக்கிய சந்தேக நபரான யூனுஸ் அபுஜாகொப்பை தேடி ஐரோப்பிய ரீதியில் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கபட்ட நிலையில் இன்று ஸ்பெயினின் சுபிரத் நகரில் காவற்துறையால் ஒருவர்சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட நபர் வெடிகுண்டுப்பட்டி ஒன்றை அணிந்திருந்ததாகவும் காவற்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று சுட்டுக்கொல்லபட்ட நபர் தேடப்பட்டுவரும் முக்கிய சந்தேகநபரான யூனுஸ் அபுஜாகொப்பா என்பதை உறுதிப்படுத்திய தகவல்களை காவற்துறை இதுவரை வெளியிடவில்லை.

APTOPIX Singapore US Navy Ship Collision

அமெரிக்க கடற்படையின் நாசகாரக்கப்பலான  யு. எஸ. எஸ் ஜோன் எஸ். மக்கெயின்  எண்ணெய்த் தாங்கிகப்பலுடன் மோதியபோது காணாமல் போன அமெரிக்கக்கடற்படை மாலுமிகள் பத்துப்பேரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன.

ஏவுகணை நாசகாரிக்கப்பலான மக்கெயின் சிங்கப்பூர் துறைமுகத்தை நோக்கிச்சென்ற போது லைபீரிய எண்ணெய்த்தாங்கிக்; கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்துக்குறித்த விசாரணைகளை பென்ரகன் ஆரம்பித்துள்ளது.

_97464985_16527b12-948f-47df-b374-ed3bad5853ea

அமெரிக்க உள்நாட்டுப்போரி;ல் அடிமைமுறையை ஆதரித்த தென் மாநிலங்களின் தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் அகற்றப்பட்டுவரும் நகாவு சர்ச்சைக்கு உள்ளாக்கபட்டுவரகின்றன.

இந்தநிலையில் ரெக்ஸஸ் பல்கலைக்கழகமும் தனது வளாகத்தில் இருந்த படைத்தளபதி ரொபர்ட் எட்வேர்டு லீயின் உருவச் சிலையை இரவோடு இரவாக  அகற்றியுள்ளது.

அமெரிக்க உள்நாட்டுப்போரி;ல் பங்கெடுத்த தென் மாநிலங்களின் தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் நியோ நாசிகள் மற்றும் வெள்ளையின மேலாத்தக அடையாளமாக மாற்றப்பட்டுவருவதால் இந்த நகர்வு எடுக்கபட்டதாகவும் ரெக்ஸஸ் பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறாக சிலைகள் நகர்வுகளுக்கு எதிராக கடந்தவாரம் குரல் கொடுத்த  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் அமெரிக்க வரலாற்றின் ஒரு அங்கமாக இருக்கும் அழகிய சிலைகள் அகற்றபடுவது கவலைக்குரியதெனவும் குறிப்பிட்டமை  குறிப்பிடத்;தக்கது

dinakarand-d-600-21-1503325722

அதிமுகவில் இதுவரை இரண்டு அணிகளாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் பன்னீர் செல்வம் அணியும் இன்று இணைந்துள்ள நிலையில் தினகரன் அணி சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென ஜெயலலிதா சமாதியில் தியானத்தை மேற்கொண்டுள்ளனர்.

தினகரன், தமது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்னை அடையாறு இல்லத்தில் ஆலோசனை நடத்தியபின்னர் இந்த தியானம் இடம்பெற்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg