Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியுடன் ஆலோசித்து நாளை இறுதித் தீர்மானம்: ரஞ்ஜன்

In இலங்கை
Published: 16:53 GMT, Aug 21, 2017 |
0 Comments
1285
icon_com
This post was written by : Ravivarman
ranjan-rama-720x450

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறித்து பிரதமர் இன்றிரவு அல்லது நாளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவு எடுப்பார் என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

இக்கூட்டத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

62 லட்சம் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்ததற்கு காரணம், திருடர்களைப் தண்டிப்பதற்கே. ஆனால், நீதி அமைச்சராக இருந்த காலத்தில் விஜேதாச ராஜபக்ஷ திருடர்களைப் பாதுகாக்கும் பணியை செய்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் நீதியமைச்சருடன் எந்தவித கோபமும் யாருக்கும் கிடையாது. இவர் புத்தசாசன அமைச்சராக இருப்பதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் இவர் சட்டத்தரணியாக இருந்தும் நீதி அமைச்சுப் பதவியை சரியாக நிறைவேற்றவில்லையென்பதே கட்சியில் பெரும்பாலானோரின் கருத்து எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg