Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா விவகாரம்: இரவோடு இரவாக மாற்றப்பட்ட சிறை அதிகாரிகள்

In இந்தியா
Updated: 05:08 GMT, Aug 22, 2017 | Published: 05:06 GMT, Aug 22, 2017 |
0 Comments
1220
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
parappana agrahara prison

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள சசிகலா குறித்து வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்களை தொடர்ந்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை தலைமை கண்காணிப்பாளர்களான நிகாம் பிரகாஷ் மற்றும் அமிருத் ஆகியோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள சசிகலாவிற்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாகவும், அவர் வெளியில் சென்றுவர அனுமதிக்கப்படுவதாகவும் அக்ரஹாரா சிறையில் ஏற்கனவே கடமையாற்றி பணியிடமாற்றம் பெற்றுச் சென்ற சிறை அதிகாரி ரூபா அதிரடி தகல்களை வெளியிட்டு வருகின்றார்.

சசிகலா வெளியில் சென்று வருவதைப் போன்ற காணொளியொன்று நேற்று வைரலாக பரவியிருந்தது. இந்நிலையில், குறித்த இரு அதிகாரிகளும் இரவோடிரவாக மாற்றப்பட்டுள்ளனர்

சசிகலா குறித்து வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து, கர்நாடகா அரசு சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. சசிகலா சிறைவைக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை, ஆறு தடவைகள் சிறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg