Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனிப்பு வர்த்தகர்களை பாதித்துள்ள ஜீ.எஸ்.டி.

In இந்தியா
Updated: 11:46 GMT, Aug 22, 2017 | Published: 11:46 GMT, Aug 22, 2017 |
0 Comments
1293
This post was written by : Varshini

இந்திய மத்திய அரசாங்கம் விதித்துள்ள ஜீ.எஸ்.டி. எனப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்காளத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான இனிப்புக் கடைகள் நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு மூடப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

புதிய வரிவிதிப்பின் மூலம், குளிரூட்டப்பட்ட உணவங்களில் காணப்படும் உணவுப் பொருட்களுக்கு 18 சதவீதமும், சாதாரண கடைகளில் காணப்படும் உணவுப் பொருட்களுக்கு 12 சதவீதமும் வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 18 சதவீத வரிவிதிப்பிற்கு உள்ளான பொருட்களைக் கொண்ட கடைகள் பெரிதும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதோடு, ஏராளமான இனிப்பு வகைகள் விற்பனையின்றி நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வரிவிதிப்பின் காரணமாக விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கொல்கத்தா நகரிலுள்ள இனிப்புக் கடை உரிமையாளரான பிரியங்கா என்பவர், அரசாங்கம் இந்த வரிவிதிப்பை மீளப்பெற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, இவ் வரிவிதிப்பானது மக்களையும் பீதிக்குள்ளாக்கியுள்ளதால் விற்பனை சரிவை எதிர்கொண்டுள்ளதாக மேற்கு வங்காள இனிப்பு வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் ரபீந்ர குமார் பல் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரிவிதிப்பாக கருதப்படும் ஜீ.எஸ்.டி. வரி, கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும், இதனால் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படாதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg