Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான்கு தசாப்தங்களின் பின்னர் அங்கோலாவிற்கு புதிய ஜனாதிபதி

In
Published: 04:54 GMT, Aug 24, 2017 |
0 Comments
1310
icon_com
This post was written by : Risha

அங்கோலாவில் நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முறையாக புதிய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்காக அங்கோலா மக்கள் வாக்களித்துள்ளனர்.

உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் ஜனாதிபதியாக பதவிவகித்த அங்கோலா ஜனாதிபதி ஜோஸ் எடுவார்டோ டோஸ் சாண்டோஸ் (José Eduardo Dos Santos), அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அங்கோலாவில் நேற்று (புதன்கிழமை) தேர்தல் நடைபெற்றது.

இம்முறை தேர்தலில் ஜோஸ் எடுவார்டோ டோஸ் போட்டியிடாத நிலையில், அவரது மக்கள் விடுதலை இயக்க கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோயோ லவுரென்கோ (João Lourenço) போட்டியிட்டுள்ளார்.

இவருக்கு மிகப்பெரும் சவாலாக அங்கோலாவின் முழுமையான விடுதலைக்கான தேசிய ஒன்றியத்தின் வேட்பாளர் இசியாஸ் சாமகுவா விளங்குகிறார். எனினும், இவ்வார இறுதியில் வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளின்படி மக்கள் விடுதலை இயக்கமே வெற்றிபெறும் என ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆபிரிக்க நாடான அங்கோலா போர்த்துக்கல் நாட்டின் ஆதிக்கத்திலிருந்து 1975ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பின்னர் அந்நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக ஜோஸ் எடுவார்டோ டோஸ் சாண்டோஸ் 1979ஆம் ஆண்டு பதவியேற்றார்.

1979ஆம் ஆண்டு முதல் 2017 வரை 38 ஆண்டுகள் வரை ஜனாதிபதியாக பதவி வகித்த அவர், தற்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதான அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg