Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊவாவில் தோற்றது 20ஆவது திருத்தச் சட்டம்

In இலங்கை
Updated: 08:34 GMT, Aug 24, 2017 | Published: 08:33 GMT, Aug 24, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
uva provincial council

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், ஊவா மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மாகாண சபை அமர்வில் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 5 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்தும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய குறித்த திருத்தச் சட்ட மூலம், அண்மையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, நேற்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்றைய தினம் அது தொடர்பான விவாதம் நாடாளுமன்றில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, இத் திருத்தச் சட்டம் அண்மையில் வடமத்திய மாகாண சபையில் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தது.

எவ்வாறெனினும், 20ஆம் திருத்தச் சட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg