Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க அணுவாயுதங்களை திரும்பப்பெற வலியுறுத்துவேன்: மார்ட்டின் ஷூல்ஸ்

In ஐரோப்பா
Published: 08:35 GMT, Aug 24, 2017 |
0 Comments
1220
icon_com
This post was written by : Elakkiya

ஜேர்மனிய தேர்தலில் அதிபர் அங்கெலா மெர்க்கலை தோற்கடித்து வெற்றிபெற்றால் முரண்பாடுகளுக்கு எதிராக ஜேர்மனிய பிராந்தியத்திலிருந்து அமெரிக்க அணுவாயுதங்கள் திரும்பப் பெறப்படும்  என சமூக ஜனநாயகக் கட்சித் தலைவரும் தேர்தல் வேட்பாளருமாகிய மார்ட்டின் ஷூல்ஸ் உறுதியளித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இதன்போது, ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் போலன்றி நேட்டோ உறுப்பினர்கள் தமது பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ள இராணுவ தளத்தில் சுமார் 20 அமெரிக்க அணுசக்தி ஆயுதங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பேர்லினில் உள்ள அமெரிக்க தூதரகம் அணுவாயுதங்கள் குறித்த கருத்துக்களை வெளியிடவில்லை.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்தெடுக்கப்படுவதற்கு முன்னரே ஜேர்மனியும் ஏனைய நேட்டோ நாடுகளும் தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தினை பாதுகாப்பு செலவீனங்களுக்காக உயர்த்துவதாக உறுதியளித்திருந்தன.

எனினும் அவற்றில் சில நாடுகள் தமது இராணுவத்தினருக்கான செலவுகளை அதிகரித்திருந்த போதிலும் சில 2 சதவீத இலக்கை அடைந்துள்ளன. இவ்வாறு பாதுகாப்பு செலவீனங்களில் 2 சதவீத இலக்கை அடைந்த நாடுகளில் ஜேர்மனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg