Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுரேஷ் பிரபு ராஜினாமா-அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் உத்தேசம்

In இந்தியா
Updated: 09:48 GMT, Aug 24, 2017 | Published: 09:48 GMT, Aug 24, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Kemasiya
download (1)

ரயில்; அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய முன்வந்ததால் அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் 4 நாட்களில் அடுத்தடுத்து 2 ரயில் விபத்துக்கள் நடந்தன. முதலில் நடந்த விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். அடுத்த விபத்தில் 150க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதனால் மனவேதனையடைந்த ரயில் அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய முன்வந்தார். இதையடுத்து அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சுரேஷ் பிரபு தனது ருவிட்டரில்; விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவதாக பிரதமர் மோடியை சந்தித்து கூறியபோது மோடி தன்னை பொறுத்திருக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ்பிரபு கோரிக்கையைத் தொடர்ந்து பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார். அப்போது சுரேஷ் பிரபு ராஜினாமாவை ஏற்று அவருக்கு வேறு பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg