Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரம்டன் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை!

In கனடா
Published: 10:07 GMT, Aug 24, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Anojkiyan
ay

பிரம்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு ஏழு மணியளவில், கெனடி வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவனியு பகுதியில், செம்னி கோர்ட்டில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த வீட்டில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்ததையடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள், வீட்டிற்கு வெளியே உள்ள நடைபாதைப் பகுதியில் இருந்து பெருமளவு வெற்றுத் தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

எனினும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட வேளையில், குறித்த அந்த வீட்டில் எவரும் இல்லாமையால், அதிஷ்டவசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தினை அடுத்து, குறித்த அந்த வீட்டைச் சூழவும் பாரிய பிரதேசத்தினைச் சுற்றி விசாரணை வலையத்தினை அமைத்துள்ள அதிகாரிகள், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg