Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மல்வத்து ஓயா நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

In இலங்கை
Updated: 10:25 GMT, Aug 24, 2017 | Published: 10:25 GMT, Aug 24, 2017 |
0 Comments
1287
This post was written by : Vithushagan

இலங்கையின் மிகப் பெரிய நீர்த்தேக்கங்களில் மூன்றாவது நீர்த்தேக்கமான கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகள் இன்று (வியாழக்கிழமை) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியானதும் சுமார் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் அடி நீரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக மூன்றரை கிலோமீற்றர் நீளத்திற்கு 22 மீற்றர் நீளமான அணைக்கட்டும் அமைக்கப்படவுள்ளது.

மேலும், இந்தத் திட்டம் பூர்த்தியானதும் அனுராதபுரம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் காணிகளில் இரு போகங்களிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என்றும் அத்தோடு சுமார் இரண்டு லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீர் வசதியும் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg