Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அங்கோலா தேர்தல்: பெரும்பான்மையுடன் முன்னணியில் ஆளும் கட்சி

In
Updated: 05:03 GMT, Aug 25, 2017 | Published: 05:03 GMT, Aug 25, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Risha
angola

அங்கோலாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் மக்கள் விடுதலை இயக்க கட்சி (MPLA) முன்னணியில் திகழ்வதாக, இதுவரை வெளியாகியுள்ள இடைக்கால முடிவுகளின்படி தெரியவந்துள்ளது.

முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி ஆளும் கட்சி 64.57 வீத வாக்குகளை பெற்றிருப்பதாக அங்கோலா தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சியும், ஆளும் கட்சிக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கிய கட்சியுமான அங்கோலாவின் முழுமையான விடுதலைக்கான தேசிய ஒன்றியம் வெறும் 24.04 வீத வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளது.

இதுவரை வெளியான இடைக்கால தேர்தல் முடிவுகளின்படி ஆளும் MPLA கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் முன்னணியில் திகழ்வதாக அங்கோலா தேர்தல் ஆணையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் ஜனாதிபதியாக பதவிவகித்த அங்கோலா ஜனாதிபதி ஜோஸ் எடுவார்டோ டோஸ் சாண்டோஸ், அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் சுமார் நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் அங்கோலாவிற்கு புதிய ஜனாதிபதியொருவர் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg