Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் தாய்லாந்து பிரதமருக்கு பிடியாணை

In
Updated: 05:48 GMT, Aug 25, 2017 | Published: 05:48 GMT, Aug 25, 2017 |
0 Comments
1316
This post was written by : Risha

சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்ட ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவிற்கு தாய்லாந்து உச்சநீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

யிங்லக்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றவியல் கவனக்குறைவு வழக்கின் தீர்ப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யிங்லக் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், யிங்லக் சுகயீனம் காரணமாகவே நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என அவரது சார்பில் முன்னிலையான யிங்லக்கின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

யிங்லக் அரசாங்கத்தில் வேளாண் மானியத் திட்டத்தின் கீழ் சந்தை விலையைவிட கூடுதல் விலையில் அரசாங்கத்திற்கு நெல்லை விற்க விவசாயிகளுக்கு சலுகை வழங்கப்பட்டதால் அரசாங்கத்திற்கு பல பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது.

இதையொட்டி விவசாயிகள் நெல் உற்பத்தியை அதிகரித்ததால் அரசாங்கக் கிடங்குகளில் கிட்டத்தட்ட 18 மில்லியன் தொன் அரிசி விற்கப்படாமல் தேங்கிக் கிடந்தது. அதனை தொடர்ந்த 2014ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சி மூலம் யிங்லக் ஆட்சி கவிழ்ந்தது. நிதி பொறுப்பற்ற ஊழல் நிறைந்த அரசாங்கமாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், இத்திட்டத்தின் கீழ் தான் குற்றம் ஏதும் புரியவில்லை என யிங்லக் தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்தும் புறக்கணித்து வந்தார். யிங்லக் மீதான குற்றம் நிரூபிக்கப்படின் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg