Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தக்காளி சாப்பிடுவதை நிறுத்துங்கள்!

In
Updated: 09:14 GMT, Aug 27, 2017 | Published: 09:14 GMT, Aug 27, 2017 |
0 Comments
1346
This post was written by : Surenth

தக்காளியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி நாங்கள் குறிப்பிடுகின்றோம்.

அடிக்கடி தக்காளி சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் அசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும்.

அடிக்கடி தக்காளியை சாப்பிட்டால் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.

கிட்னி தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள், பொட்டாசியம் நிறைந்த தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது கிட்னியின் செயல்பாடுகளை குறைத்துவிடும்.

டயேரியா பாதிப்பு இருப்பவர்கள், உணவில் தக்காளியை சேர்க்க கூடாது. ஏனெனில் அது டயேரியாவை ஏற்படுத்தும் சால்மோனெல்லா பக்டீரியாவின் வளர்ச்சியை தூண்டிவிடும்.

தக்காளியில் அதிக அளவு லைகோபென் உள்ளது. எனவே அதிகமாக தக்களியை சேர்த்துக் கொண்டால், சருமத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.

அசிட் நிறைந்த உணவு வகையில் ஒன்றான தக்காளியை அதிகம் சாப்பிட்டால், சிறுநீர்ப்பையில் தொற்றை உண்டாக்கும்.

தக்காளியில் அல்கலாய்டு அதிகம் உள்ளது, எனவே உடலில் கல்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தி, எலும்புகளில் தேய்மானம் மற்றும் வலியை உண்டாகும்.

தக்காளி ஒற்றைத் தலைவலி பிரச்சினையை உண்டாக்கும். எனவே ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg