Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிரடி ஆட்டத்தால் அரங்கை ஆச்சரியப்படுத்திய மெஸ்ஸி!

In உதைப்பந்தாட்டம்
Updated: 11:24 GMT, Aug 27, 2017 | Published: 11:10 GMT, Aug 27, 2017 |
0 Comments
1348
icon_com
This post was written by : Puvanes
messi001

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் பார்சிலோனா அணி, அலெவ்ஸ் அணியினை வீழ்த்தியது.

கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்படும் குறித்த போட்டித் தொடரில் உலகில் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

பார்சிலோனா அணிக்கும், அலெவ்ஸ் அணிக்கும் நடைபெற்ற நேற்றைய போட்டியில் 2 கோல்களை அடித்து பார்சிலோனா அணியின் வெற்றியை உறுதி செய்தார் நட்சத்திர வீரர் மெஸ்ஸி.

போட்டியில் முதற்பாதியில் இரு அணிகளுக்கும் கோல் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இரண்டாவது பாதியில் மைதானத்தை ஆட்கொண்ட மெஸ்ஸி மாயாஜால ஆட்டத்தினை வெளிப்படுத்தி, 55 ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், 66 ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார்.

தொடர்ந்து, அலெவ்ஸ் அணிக்கு கோல் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்காமல் செல்லவே 2 -0 என்ற கணக்கில் பார்சிலோனா வெற்றியடைந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg