Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் துயிலுமில்லம்

In இலங்கை
Published: 09:45 GMT, Aug 28, 2017 |
0 Comments
1454
icon_com
This post was written by : Varshini

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட உறவினர்கள், அங்கு உறங்கும் தமது உறவுகளை நினைத்து கல்லறைகளை கட்டியணைத்து கதறிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்தில் 1800இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதனை துப்பரவு செய்யும் பணிகள், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றன. இதன்போது, கல்லறைகளை இனங்கண்ட உறவினர்கள், அதனை கட்டியணைத்து கதறியுள்ளனர். அதன் பின்னர் கல்லறைகளை சேகரித்து அடுக்கிய உறவினர்களும், முன்னாள் போராளிகளும் மலரஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

வடக்கு கிழக்கில் காணப்படும் மாவீரர் துயிலும் இல்லங்கள் யுத்த நிறைவின் பின்னர் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டும், கவனிப்பாரற்றும் காணப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தில் அவற்றை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

mullivaikkal (5) mullivaikkal (4) mullivaikkal (3) mullivaikkal (2) mullivaikkal (1) mulli (2) mulli (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg