Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவில் நிலமெஹெவர நடமாடும் சேவை!

In இலங்கை
Published: 15:18 GMT, Aug 28, 2017 |
0 Comments
1378
icon_com
This post was written by : Ravivarman
21216208_1582973965056651_1928002367_o

உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலமெஹெவர நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (திங்கட்கிழமை) முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய குறித்த நிகழ்ச்சித் திட்டம் அனைத்து பிரதேச செயலகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற குறித்த நடமாடும் சேவையில், தமக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ளவென அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அத்துடன் இன்று பிற்பகல் வரை இந்த நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டம் இடம்பெற்றதாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் குணபாலன் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நடமாடும் சேவையின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

21222496_1582973935056654_895543066_o 21198370_1582974011723313_1591143606_o 21150687_1582973901723324_400542623_n

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg