Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லிக்கு காத்திருக்கும் சவால்! – இந்திய அணிக்கு உண்மையான சோதனை

In கிாிக்கட்
Updated: 05:48 GMT, Aug 29, 2017 | Published: 05:48 GMT, Aug 29, 2017 |
0 Comments
2989
This post was written by : Puvanes

இந்திய அணிக்கு தென் ஆபிரிக்காவுடனான போட்டித் தொடர் பெரும் சவாலாக இருக்கும் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இவ் வருட இறுதியில் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தினை இந்திய அணி மேற்கொள்ளவுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஸ்மித் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இந்தியா டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றது எனக் குறிப்பிட்ட ஸ்மித், விராட் கோஹ்லியில் விளையாட்டும், அவர் அணிக்கு உத்வேகம் அளிக்கும் விதமும் அனைவரும் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தென்னாபிரிக்காவின் சூழல் மாறுபட்டதாக இருக்கும் எனக் கூறிய ஸ்மித் இந்தியாவானது, இலங்கை மற்றும் மேற்கிந்தியாவின் சொந்த மண்ணில் மட்டுமே விளையாடியுள்ளது. ஆனால் தென்னாபிரிக்காவே இந்திய அணிக்கு பரிசோதனையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

அந்த வகையில் அணியை சிறப்பாக கொண்டு செல்லும் விராட் கோஹ்லிக்கு தென்னாபிரிக்கா தொடரே உண்மையான சோதனையாக அமையும் எனவும் ஸ்மித் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகின் சிறந்த அணியாக உருவாகியுள்ள இந்தியா இலங்கையை சொந்த மண்ணில் வென்றாலும், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பலப்பரீட்சை நடத்தியது இல்லை.

எனவே, தென்னாபிரிக்காவை சொந்த மண்ணில் எதிர் கொள்வது இந்தியாவிற்கும், விராட் கோஹ்லிக்கும் மிகப் பெரிய சவாலாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg