Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலை வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படும்!

In இலங்கை
Published: 15:01 GMT, Aug 30, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Ravivarman

திருகோணமலை வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சை பிரிவொன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருகோணமலை மாவட்டம் சிறுநீரக நோய் பெருமளவில் காணப்படும் பிரதேசமாக அமைந்துள்ளது.

இதனால் இந்த நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்வதுடன் இதனால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுப்பதற்காக நவீன வசதிகளைக் கொண்ட சிறுநீரக சிகிச்சை பிரிவொன்று அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மேற்படி திட்டத்திற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கேள்வி குழுவின் சிபாரிசுக்கமைவாக 249.32 மில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg