Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

டெல்லி சென்ற செங்கோட்டையன் – மத்திய அமைச்சருடன் பேச்சு

In இந்தியா
Published: 05:14 GMT, Sep 1, 2017 |
0 Comments
1098
icon_com
This post was written by : Kemasiya
dhgxg

டெல்லியில் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் ஆகியோரை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். பாடசாலைகளுக்கான கழிவறைகளை அமைத்து தூய்மையை கடைப்பிடிப்பதில், இந்தியாவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.

இதற்கான விருது வழங்கும் விழா டில்லியில் இன்றய தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெறுகின்றது. இந்த விருதை பெற்றுக் கொள்வதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்றய தினம் டில்லி சென்றார்.

அங்கு அவர் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜடேவரை சந்தித்து பேசினார். அப்பொழுது மனு ஒன்றையும் அவரிடம் கையளித்தார். குறித்த மனுவில் 4 ஆண்டுகளில் ரூ.2,248 கோடியே 79 இலட்சம் நிதி மத்திய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது, அதை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்தாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வர்த்தக மற்றும் தொழில்துறை ராஜாங்க அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார் . குறித்த சந்திப்பின் பின்னர் நிர்மலா சீதாராமனை ஏன் சந்தித்தீர்கள்? டில்லி வரும் அமைச்சர்கள் எல்லாம் அவரை சந்திப்பது எதற்காக என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்.

ஏனைய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனை ஏன் சந்திக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. அதை அவர்களிடம் கேளுங்கள். சரக்கு சேவை வரி தொடர்பாக தமிழ்நாட்டில் அவரை நான் சந்தித்தேன். டில்லிக்கு வரும்போது சந்திக்குமாறு அவர் ஏற்கனவே கூறி இருந்ததாலும் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக அவரை நான் சந்தித்தேன்’ என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg