Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அ.தி.மு.க மூத்த தலைவர் தம்பித்துரை பிரதமர் மோடியை சந்தித்தார்

In இந்தியா
Published: 06:06 GMT, Sep 1, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : Kemasiya
dfxhn cfxh

பாராளுமன்ற துணை சபாநாயகரும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அதன்  பின்னர் அவர் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவையும் அவரது இல்லத்தில் சந்தித்தார்.

மத்திய அமைச்சர் சபை விரைவில் மாற்றியமைக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் புதிய அமைச்சர் சபையில் அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் வழங்குமாறு வலியுறுத்தவே இந்த சந்திப்பு நடந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் இந்த தகவலை தம்பிதுரை தரப்பு மறுத்துள்ளது. இலங்கை அரசு கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடியையும் டெல்லி மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரையும் சந்தித்ததாக தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg