Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜகத் ஜயசூரியவை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்: மஹிந்த

In இலங்கை
Published: 06:01 GMT, Sep 1, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Ravivarman
Sri-Lankas-president-Mahi-006

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து அவரைக் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு பங்களிப்பு செய்த இராணுவ வீரர்களுக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தாம் கவலையடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களும் அதிகமாக குரல்கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளதுடன், உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, வாக்களிக்கும் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg