Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மெக்சிகோ எல்லைச்சுவர் முன்மாதிரிக்கான ஒப்பந்தங்களில் அமெரிக்கா கைச்சாத்து

In
Updated: 06:08 GMT, Sep 1, 2017 | Published: 06:07 GMT, Sep 1, 2017 |
0 Comments
1151
icon_com
This post was written by : Elakkiya
_97625499_gettyimages-632813334

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய மெக்சிகோ எல்லைச்சுவர் அமைக்கும் திட்டத்திற்கான முன்மாதிரியை அமைப்பதற்கு நான்கு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

மேற்படி நான்கு நிறுவனங்களினதும் முன்மாதிரிகள் 9 மீற்றர் நீளமும் 30 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் டிசெம்பர் மாதம் கையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து முன்மாதிரி எல்லைச்சுவரின் சேதம் மற்றும் ஊடுருவல் தன்மை தொடர்பில் சிறிய கைக்கருவிகளை பயன்படுத்தி இரண்டு மாதங்களுக்கு அதிகாரிகள் சோதனை செய்வர் என்றும் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. தலா 5 லட்சம் அமெரிக்க டொலர் மதிப்பில் மேற்படி நான்கு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெக்சிகோ எல்லைச் சுவரின் வடிவமைப்பு தரத்தை மேம்படுத்துவதற்கு இத்தகைய முன்மாதிரிகள் பயன்பெறும் என சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் துணை ஆணையாளர் ரொனால்ட் வித்தெலோ தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க எல்லையில் தொடர்ச்சியாக எல்லைச் சுவர் அமைக்க வேண்டும் என்பது ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg