Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையுடனான தொடரில் தோனியின் சாதனை பட்டியல்!

In விளையாட்டு
Updated: 06:46 GMT, Sep 1, 2017 | Published: 06:32 GMT, Sep 1, 2017 |
0 Comments
1483
This post was written by : Risha
dhoni002

அனைத்து விதமான போட்டிகளிலும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி நிகழ்த்தியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில், மூன்று பிடியெடுப்புகளை மேற்கொண்டதன் மூலமே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து விதமான போட்டிகளிலும் தோனி இதுவரை 737 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அதேபோன்று ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர் நேற்றைய போட்டியையும் சேர்த்து ஒருநாள் போட்டியி 73 முறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார்.

மேலும், விக்கெட் காப்பாளராக அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகவும் தோனி திகழ்கிறார். நேற்றைய போட்டியானது தோனியின் 467ஆவது போட்டியாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg