Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய துணைத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவு

In
Updated: 07:26 GMT, Sep 1, 2017 | Published: 07:22 GMT, Sep 1, 2017 |
0 Comments
1272
This post was written by : Elakkiya

ரஷ்ய அரசாங்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள ரஷ்ய துணைத் தூதுவர் காரியாலயத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நியூயோர்க் மற்றும் வொஷிங்டனில் அமைந்துள்ள தூதரக இணை நிறுவனங்களை மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவையாவும் இன்று சனிக்கிழமையுடன் மூடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் அமெரிக்க தூதரங்களில் பணியாற்றிய அமெரிக்க இராஜதந்திரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கடந்த மாதம் ரஷ்யா அறிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு மற்றும் கிரைமியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மேலதிக தடைகளை விதித்தது. அத்துடன் அமெரிக்காவிலிருந்து 35 ரஷ்ய இராஜதந்திரிகளும் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து ரஷ்யாவிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை குறைக்குமாறு ரஷ்யா உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg