Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொதுக்குழுவில் கலந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-டிடி.வி தினகரன்

In இந்தியா
Published: 08:31 GMT, Sep 1, 2017 |
0 Comments
1072
icon_com
This post was written by : Kemasiya
bvhmgvmh

எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி பொதுக்குழு கூட்டமென அறிவித்திருப்பது சட்ட விரோதமானது என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் பேராதரவோடு அதிமுகவையும், சின்னத்தையும் விரைவில் மீட்போம் என கூறியுள்ளார்.

வரும் 12ஆம் திகதி அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ள தினகரன், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கும் அம்மா அணிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கான தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள தினகரன், உண்மை தொண்டர்கள் இதனை நம்ப வேண்டாம் என்றும், மீறி கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சட்டத்துக்கு புறம்பான அறிவிப்பை செய்தவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg