Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

In
Updated: 08:39 GMT, Sep 1, 2017 | Published: 08:38 GMT, Sep 1, 2017 |
0 Comments
1268
icon_com
This post was written by : Elakkiya
padang-quake

இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேற்கு சுமத்ரா மாகாணத்தின் மென்டாவி தீவுப்பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கடலுக்கு அடியில் 49 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி தாக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள போதிலும் அஞ்சத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தினால் சேதங்கள் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg