Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளம் இரசிகரை மகிழ்வித்த மெஸ்ஸி!

In உதைப்பந்தாட்டம்
Updated: 08:53 GMT, Sep 1, 2017 | Published: 08:53 GMT, Sep 1, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Risha
messi

ஆர்ஜன்டீன கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி, எதிர்பார்ப்புடன் காத்திருந்த தனது இளம் இரசிகருடன் ஒளிப்படம் எடுத்து அவரை மகிழ்வித்துள்ளார்.

ஆர்ஜன்டீன மற்றும் உருகுவே தேசிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தகுதிப் போட்டியில் விளையாடுவதற்காக, ஆர்ஜன்டீன கால்பந்து அணி உருகுவேக்கு வந்த போதே குறித்த இளம் இரசிகருக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

உருகுவேயின் பிரபல விடுதியொன்றுக்கு ஆர்ஜன்டீன கால்பந்து அணி வருகை தந்ததுள்ளது. இதன்போது மெஸ்ஸியின் இளம் இரசிகரொருவர் அவருக்கான கடிதத்துடன் காத்திருந்துள்ளார்.

ஆனால், அணியினரின் வருகையின் போது குறித்த சிறுவன் பாதுகாப்பு அதிகாரிகளினால் விலகிச் செல்ல வற்புறுத்தப்பட்டுள்ளார். அதனை அவதானித்த மெஸ்ஸி, குறித்த இளம் இரசிகனை அழைத்து, அவருடைய ஆட்டோகிராபில் கையொப்பமிட்டதுடன், அவருடன் ஒளிப்படம் எடுத்தும் உள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg