Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சர்வதேசத்தை வெற்றிக் கொண்டதன் அர்த்தம் என்ன?

In இலங்கை
Published: 08:22 GMT, Sep 1, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Arul Jesu
lockuge - 2

முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரியவின் விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தினால் எவ்வளவு தூரத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தை வெற்றிக் கொண்டுள்ளதென்பது நன்கு புலப்படும் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிரணியின் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் ஊடக பிரதானிகளை சந்தித்த ஜனாதிபதி கட்சியின் 66 ஆவது சம்மேளன கூட்டத்திற்கு பின்னர் திருடர்கள் அற்ற நாடாக இலங்கையை மாற்றி அமைப்பதாக கூறியதாக தெரிவித்தார்.

அப்படியானால் அரசாங்கத்தில் உள்ள திருடர்கள் தொடர்பில் ஜனாதிபதி எந்த நிலைப்பாட்டில் இருகிறார் என்பதனை கூற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டு எதிரணி திருடர்கள் தொடர்பில் டொப் 10 பட்டியலை வெளியிட்டதாகவும், ஆனால் அது தொடர்பில் விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவோ அல்லது ஏனைய ஆணைக்குழுக்களோ முனைவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg