Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லிக்கு அழைப்பு

In விளையாட்டு
Updated: 09:53 GMT, Sep 1, 2017 | Published: 09:43 GMT, Sep 1, 2017 |
0 Comments
1233
This post was written by : Risha

இங்கிலாந்திற்கு எதிரான சர்வதேச ரி-ருவெண்ரி போட்டிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லி நர்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரிக்கு பதிலாக, ஆஷ்லியை அணியில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அணியில் வேறெந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஜுலை மாதம் இடம்பெற்ற இந்தியாவுடனான ரி-ருவெண்ரி போட்டியில் இடம்பெற்றிருந்த ஏனைய வீரர்கள், இங்கிலாந்துடனான போட்டியில் இடம்பிடித்துள்ளனர்.

ஆஷ்லி, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ரி-ருவெண்ரி போட்டியிலேயே இறுதியாக பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg