Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம்!

In இலங்கை
Published: 09:44 GMT, Sep 1, 2017 |
0 Comments
1349
icon_com
This post was written by : Ravivarman
R.P.D.LOGO_

தேசிய அடையாள அட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று முதல் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் சர்வதேச தரத்திலான புகைப்படங்களை தமது அடையாள அட்டை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்படி புகைப்படங்களை எடுப்பதற்காக நாடு முழுவதும் 1700 புகைப்பட்ட நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த புகைப்பட நிலையங்களுக்கு தமது முத்திரையுடன் பதிவுச் சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg