Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மாரப்பனவை சந்தித்தார் சுஸ்மா

In இலங்கை
Published: 09:49 GMT, Sep 1, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Arul Jesu

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள்; குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரவீ குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக ரவீ குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன், முக்கிய விவகாரங்கள் குறித்து சுவராஜ் ஆலோசனை நடத்தியதாகஇந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் ஆகியோரை சுஸ்மா சுவராஜ் சந்தித்திருந்தமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg