Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஓவியா நடிப்பில் ‘களவாணி’ இரண்டாம் பாகம்!

In சினிமா
Published: 11:38 GMT, Sep 1, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Vithushagan
hqdefault

நடிகை ஓவியா நடித்த ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்  வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘களாவாணி’ என்ற படத்தை 7 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சற்குணம் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ‘பசங்க’ படத்தில் அறிமுகமான விமலை  நாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர்.

 இந்தப் படத்தின் மூலம் நடிகை ஓவியா நாயகியாக அறிமுகமானார். முதன் முறையாக தஞ்சை பகுதி மண்வாசனை கதையாக வெளிவந்தது.

படத்தில் விமலுடன் ஓவியா, சரண்யா, இளரவசு, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு எஸ்.எஸ்.குமரன் இசையமைத்திருந்தார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது.

தற்போது அவர் ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்து வருகிறார். இதனை பூபதி பாண்டியன் இயக்குகிறார்.

இது விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படம் முடிந்ததும் வெற்றிவேல் படத்தின் இயக்குனர் வசந்தமணி இயக்கும் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg