Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீட் தேர்வினால் மருத்துவர் கனவு சிதைந்தது: மாணவி தற்கொலை செய்ததால் பரபரப்பு

In இந்தியா
Updated: 14:08 GMT, Sep 1, 2017 | Published: 14:04 GMT, Sep 1, 2017 |
0 Comments
1373
This post was written by : Anojkiyan
anitha

மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்த அனிதா, கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்னை பதிவுசெய்தார்.

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு கண்டிப்பாக நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தனால் அனிதாவும் நீட் நுழைவு தேர்வு எழுதினார். ஆனால் அதில், 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.
எனவே, நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் அனிதா மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதைதொடர்ந்து, மருத்துவ படிப்பு வாய்ப்பு பறிபோனதே என மன உளைச்சலுக்கு உள்ளான அனிதா இன்று (வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்துள்ளார்.

இதற்கு நீட் நுழைவு தேர்வே காரணம் என பலரும் தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அத்தோடு அனிதாவின் மரணத்திற்கு வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg