Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மாணவி அனிதா குடும்பத்திற்கு தேவையான உதவிளை அரசு வழங்கும்: விஜயபாஸ்கர்

In இந்தியா
Published: 04:49 GMT, Sep 2, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Vithushagan
Vijay_1_12354_20285

மாணவி அனிதா குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், தமிழக   அரசு செய்யும் என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.

மாணவி அனிதா தற்கொலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  அமைச்சர் விஜயபாஸ்கர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”எந்த காரணத்துக்காகவும், மாணவர்கள், இதுபோன்ற முடிவை எடுக்கக் கூடாது. ‘நீட்’ தேர்வு எழுத, மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வாய்ப்பு உள்ளன. இதனால், இந்தாண்டு கடைசி வாய்ப்பாக, மாணவர்கள் கருத வேண்டாம். கடந்த ஆண்டு இடம் கிடைக்காதவர்கள், இந்தாண்டு தேர்வு எழுதி, மருத்துவ இடங்கள் பெற்றுள்ளனர்.

அனிதா போன்ற மாணவர்களுக்கு, மருத்துவ கல்வியை பெற்று கொடுக்க, தமிழக அரசு தொடர்ந்து போராடியது. மாணவர்களுக்கு, அடுத்தடுத்து வாய்ப்புகள் உள்ளதால், இதுபோன்ற முடிவை தவிர்க்க வேண்டும். அனிதா குடும்பத்துக்கு, தேவையான அனைத்து உதவிகளையும், தமிழக அரசு செய்யும்” என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg