Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியாவின் ஏவுகணை திறனை கட்டமைக்க அமெரிக்கா உதவி

In உலகம்
Updated: 04:32 GMT, Sep 2, 2017 | Published: 04:32 GMT, Sep 2, 2017 |
0 Comments
1258
This post was written by : Risha

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், தென்கொரியாவின் ஏவுகணை திறனை கட்டமைக்க உதவி செய்வதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்- இற்குமிடையே நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இவ்விடயம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, வடகொரியாவின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்த்து கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு திறன்களை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இதேவேளை, பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு வடகொரியாவிற்கு அழுத்தம் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், வடகொரிய அணுசக்தி நெருக்கடியை சமாதானமான முறையில் தீர்க்க வடகொரியாவிற்கு மேலும் பொருளாதார தடைகளையும், அழுத்தங்களையும் பிரயோகித்து பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg