Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோனியின் கிரிக்கட் வாழ்க்கை முடிந்துவிடவில்லை: ரவிசாஸ்திரி

In கிாிக்கட்
Updated: 05:06 GMT, Sep 2, 2017 | Published: 05:06 GMT, Sep 2, 2017 |
0 Comments
1514
This post was written by : Elakkiya

தோனியின் கிரிக்கட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கற்பனை செய்துவிடாதீர்கள் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது ரவி சாஸ்திரி மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய அணியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரே தோனி. வீரர்கள் ஓய்வறையில் வாழும் ஒரு ஜாம்பவான். இவ்வாறு கூறுவதால் அவருடைய கிரிக்கட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்காதீர்கள். அவர் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. தன்னுடைய கிரிக்கட் வாழ்க்கையில் பாதி அளவைக் கூட அவர் நிறைவு செய்யவில்லை. தோனிக்கு பதிலாக இன்னுமொரு வீரர் வருவார் என்றோ பல சாதனைகளை படைப்பார் என்றோ நினைத்தால் அது தவறு. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த விக்கெட்காப்பாளர் தோனியே” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg