Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மஹிந்தவின் தீர்மானம்

In இலங்கை
Published: 05:23 GMT, Sep 2, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Arul Jesu
Mahinda-Rajapaksa-2

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு விழாவில் கலந்துக் கொள்ள போவதில்லை என்ற தீர்மானத்தை கூட்டு எதிரணி எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலுளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி செயற்படுவதால் தாம் உள்ளிட்ட கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் எவரும் நாளைய ஆண்டு விழாவில் கலந்துக் கொள்ளமாட்டார்கள் எனவும் அவர் இங்கு தெரிவித்தார்.

எனினும் ‘நீங்கள் கட்சியின் 65 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக் கொண்டிர்கள் அல்லவா’ என இதன் போது ஊடகவியலார் ஒருவர் வினவினார்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஸ, இந்த இரண்டு கட்சிகளின் கூட்டு தற்காலிகமானது என கருதியதால் அன்று அவ்வாறு செயற்பட்டதாகவும், ஆனால் இது தொடர்ந்தும் கடைபிடிக்கப்படுவதால் அங்கு செல்ல போவதில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயச10ரியவுக்கு எதிராக சாட்சியம் வழங்க போவதாக பீலட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தமை தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, சரத் பொன்சேக்கா நாட்டை நேசிக்காத மனிதர் என பதிலளித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg